Skip to main content

Posts

Showing posts from May, 2017

நரகம்

“சார், சந்தோஷ் வந்துருக்காரு”, வீட்டின் முன்பகுதியில் பொருத்தப் பட்டிருந்த பேஸ் டிடக்டர் ஒலித்தது. தின செய்தியை கேட்டுக் கொண்டிருந்த அன்புவின் முகம் சட்டென்று மலர்ந்தது. “உள்ளே வர அனுமதி” ஆணையிட்டான் வெளிக் கதவு திறப்பதற்கு. “என் வீட்டுக்கு வர இன்று தான் கூகிள்ல வழி கண்டுபிடிச்ச போல” சற்று கோபம் கொண்டவன் போல நடித்தான் தன் கல்லூரி நண்பனிடம். “சரி விடு. அதான் இன்னிக்காவது வந்துருக்கேன்னு சந்தோச பட்டுக்கோ” சிரித்துகொண்டே விடையளித்தான். “கண்ணு, யாரு வந்துருக்கானு பாரு” உள்ளே இருந்த தன் மனைவி சந்தியாவை அழைத்தான். அவள் உள்ளே என்ன வேலை செய்து கொண்டிருந்தாள் என்பது தெரியவில்லை. “அப்படிப்பட்ட வி.ஐ.பி யாரு வந்துருக்கா??” நக்கல் அடித்துக்கொண்டே வெளியே வந்து நின்றவள் ஆனந்தம் கொண்டவளாய் “வாங்க ப்ரோ, என்ன இந்த பக்கம்?? உங்களுக்கு தான் இப்படி ஒரு சிஸ்டர் இருக்கறதே மறந்து போச்சே” அதே நக்கலுடன். “அட என்னமா சந்தியா, நீயுமா என்ன புரிஞ்சுக்கல!!” பேச்சில் கவலை சாயலுடன் சந்தோஷிடம் இருந்து பதில் வந்தது. “சரி விடுங்க, வந்ததும் வராததுமா அதை பத்தி பேசிக்கிட்டு” என்றவள், பேச்சை மாற்றி வந்தவரை உ...