Skip to main content

Posts

Showing posts from November, 2017

இருள்

(குறிப்பு: இது ஒரு உண்மை சம்பவத்தை தழுவியது) ஞாயிற்று கிழமை, விடுமுறை தினம். சரி டிவியில் எதாவது படம் பார்ப்போம் என்று அமர்ந்தேன். நான் ஏமாற்றம் அடையவில்லை; அது ஒரு திகில் படம். அதுவும் ஒரு திறமையான இயக்குனரின் முதன் முயற்சி. படம் மிகவும் சுவாரசியமாக தான் சென்று கொண்டிருந்தது. தனியாக பார்க்கும் அறிய வாய்ப்பும் எனக்கு கிடைத்தது. படத்தின் சில நிகழ்வுகள் என் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை தான் மனதில் கொண்டு வந்தது..மறக்க கூடியதா அது!! டிசம்பர், 2015. கோரமான மழையாலும் அதனால் ஏற்பட்ட வெள்ளத்தாலும் சென்னையும் அதன் உயிர்களும் (ஆம்..எல்லா உயிர்களும் தான்) தத்தளித்து கொண்டிருந்த நாட்கள். அது எனக்கு கல்லூரியின் முதலாமாவது வருடம். கல்லூரியே காலியாய் இருந்தது..எல்லா மாணவர்களையும் அவரவர் ஊர்களுக்கு செல்ல வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்ததின் விளைவு தான். வியப்பில்லை. என்னோடு சேர்த்து ஒரு நான்கு ஐந்து மாணவர்கள் அடுத்த நாள் பயணத்திற்கு முடிவெடுத்தோம். எங்களை விடுதியினுள் இருக்க அனுமதிக்க வில்லை, மாறாக நாங்கள் உணவகத்தின் மேசைகளை படுக்கைகளாக எண்ணிகொண்டோம். கடிகார முட்கள் மட்டுமே அதனை மாலை வேல...