Skip to main content

Posts

Showing posts from April, 2019

Hanger எங்கள் அங்கம்

                      நாட்டின் பெரும் மூளைகளில் பொறியியலாளர் என்றால் கட்டட பொறியாளர் என்றே பதிய தொடங்கிய காலம், அது இந்திய தேசம் சுதந்திரத்தினை அடைந்த நேரம். அப்பொழுதே வளர்ச்சியின் நோக்கோடும் தொழில் திறனை வளர்க்கும் பொது நலத்திலும் நாட்டில் எங்கும் இல்லாத புதிய நான்கு துறைகளை கொண்டு எழும்பியது தனி காட்டு ராஜாவாக ஒரு சிகரம், அதற்கு Madras Institute of Technology என்னும் பெயர் கொடுத்தார் சின்னுசாமி ராஜம்.          எழுபது வருட வரலாற்றை தன்னகத்தே கொண்ட கல்லூரி ஆதலால் இங்கு இருக்கும் கற்களிலும் புற்களிலும் கூட அந்த பழமை வாசம் வீச தான் செய்கிறது. கல்லூரியின் வடக்கு பகுதியின் வாயிலில் உள்ளே நுழைந்தால் பார்ப்பவர் கண்களுக்கு பெரும் பிரமிப்பை உண்டாக்கும் வகையில் இருக்கும் ஆக்கிரமிப்பு, அது MIT ஐ தோளில் தூக்கி வளர்த்த மூத்த பிறப்பு.           Hanger என்றால் போர் விமானங்களை நிறுத்தி வைக்கப்படும் இடம் என்று ஆங்கில மொழியில் அர்த்தம். இரண்டாம் உலகப் போரில் பிரிட்டிஷார் சார்பில் பங்கெடுத்...