நாட்டின் பெரும் மூளைகளில் பொறியியலாளர் என்றால் கட்டட பொறியாளர் என்றே பதிய தொடங்கிய காலம், அது இந்திய தேசம் சுதந்திரத்தினை அடைந்த நேரம். அப்பொழுதே வளர்ச்சியின் நோக்கோடும் தொழில் திறனை வளர்க்கும் பொது நலத்திலும் நாட்டில் எங்கும் இல்லாத புதிய நான்கு துறைகளை கொண்டு எழும்பியது தனி காட்டு ராஜாவாக ஒரு சிகரம், அதற்கு Madras Institute of Technology என்னும் பெயர் கொடுத்தார் சின்னுசாமி ராஜம்.
எழுபது வருட வரலாற்றை தன்னகத்தே கொண்ட கல்லூரி ஆதலால் இங்கு இருக்கும் கற்களிலும் புற்களிலும் கூட அந்த பழமை வாசம் வீச தான் செய்கிறது. கல்லூரியின் வடக்கு பகுதியின் வாயிலில் உள்ளே நுழைந்தால் பார்ப்பவர் கண்களுக்கு பெரும் பிரமிப்பை உண்டாக்கும் வகையில் இருக்கும் ஆக்கிரமிப்பு, அது MIT ஐ தோளில் தூக்கி வளர்த்த மூத்த பிறப்பு.
Hanger என்றால் போர் விமானங்களை நிறுத்தி வைக்கப்படும் இடம் என்று ஆங்கில மொழியில் அர்த்தம். இரண்டாம் உலகப் போரில் பிரிட்டிஷார் சார்பில் பங்கெடுத்த ஓரிரண்டு விமானங்கள் நிறுத்த ஏதுவாக மரங்கள் நிறைந்த காடுகளாக காட்சி அளித்த குரோம்பேட்டையில் அமைக்கப்பட்ட ஒரு கட்டமைப்பு தான் Hanger I என்ற பெயரில் முதிர்ச்சியின் அடையாளத்தோடு இன்று தெரிகிறது.
Hanger I ஆல் கவரப்பட்ட ஆதிகால MIT மக்கள் உருவத்தில் ஒத்ததாக இன்னொரு Hanger ஐ 1950 ல் திறந்தனர். அதற்கு Hanger 2 என்று பெயரிட்டு MIT யின் சகாவாக இணைத்தனர்.
கல்லூரியின் இணையாக அருகில் ஓடும் மின்சார ரயில் வண்டியில் இருந்தே நமது வளாகத்தின் அழகை காண்போருக்கு இரண்டு பெரிய தகர கொட்டகைகளை இவை இரண்டும் காட்சி அளிக்கின்றன. ஆனால் அந்த துருபிடித்த தகரங்களுக்கு உள்ளே ஆயிரம் ஆயிரம் அழியாத நினைவலைகள் ஓடி கொண்டிருக்கின்றன.
Hanger I ன் அமைப்பானது நீண்ட நீண்ட இரும்பு தூண்களை கொண்டு எழுப்பப்பட்டது. முன்பக்கம் மிகவும் அகண்ட பெரிய வாயில் நமது Hanger ஐ பிரமாண்டமாக காட்சி அளிக்கும் வாயிலின் கதவுகள் அடியில் இரண்டு மூன்று இரும்பு சக்கரங்கள் துருபிடித்த நிலையில் காணப்படும். அவை விமானங்கள் உள்ளே சென்று வர வசதியாக திறந்து மூட பயன்பட்டது என்றது விளங்கும். முன் பக்கத்தைப் போலவே பின் பக்கத்திலும் ஒரு வாயிலும் அதற்கும் சக்கரங்கள் பொருந்திய பெரிய இரும்பு கதவும் அமைந்துள்ளது. ஆனால் அது பல வருட காலமாக துருபிடித்த நிலையில் இருந்த காரணத்தால் பயனற்று போனது.
Hanger I மாலை நெருங்கும் வேலையிலேயே இருள் சூழ்ந்து பயம் அளிக்கும் வகையில் இருக்கும். உள்ளே பின் பக்க கதவை அடைத்தவாறு மேடை போல் அமைந்திருக்கும். இரு பக்கமும் இரு சிறிய அறைகள். சுமார் ஆயிரத்திற்கும் மேல் ஆட்களை கொள்ளும் அளவுக்கு இருக்கும் நமது Hanger I ஐ அன்று முதல் இன்று வரை கல்லூரியின் சில திருவிழாக்களை சீரும் சிறப்புமாக நடத்தும் ஒரு அரங்கமாக பயன்படுத்துகிறார்கள். மேலும் அது உட்புற விளையாட்டுகளை விளையாடும் அங்கமாகவும் பயன்படுகிறது.
இரண்டாம் Hanger, அதன் உடன் பிறப்பு போல இல்லாமல் கொஞ்சம் பொலிவுடன் காட்சி அளிக்கும். இதுவும் இரும்பு தூண்களின் துணையில் எழுந்து நின்றாலும் இடையில் சிமெண்ட் கொண்டு சுவர்களை அமைத்து பலபடுத்தி உள்ளனர். இதன் அடித்தளத்தில் உள்ளே ஒரு மேடை அமைப்பும், அதன் பின் பக்க சுவரில் Madras Institute of Technology என்றும் July 1948 என்றும் பொறித்திருக்கும் இந்த அரங்கை தான் ஆரம்ப காலத்தில் பட்டமளிப்பு விழாக்கள் நடத்துவதற்கு பயன் படுத்தி வந்துள்ளனர். தற்காலத்தில் அவல நிலையில். தற்பொழுது அடித்தளத்தில் ஆய்வகங்கள் அமைத்து பயன்பாட்டுக்கு உள்ளது.
மேலும் இரண்டாம் Hanger ல் முதல் தளம் அமைத்து அதனை வடக்கு தெற்கு என இரண்டு பாகங்களாக பிரித்து மாணவர்களின் தேர்வுகளை நடத்தும் ஒரு பெரிய அரங்கமாக அமைத்துள்ளனர். இங்கு சுமார் 500 நபர்கள் வீதம் அமர்ந்து தங்கள் தலை விதியை நிர்ணயிக்கும் முயற்சியில் ஈடுபடுத்தலாம். சாம்பல் நிற புறாக்களின் சிறகுகள் படபடத்துக் கொள்ளும் இசையை ரசித்த வண்ணம் இங்கு எழுதப்பட்ட தலை எழுத்துக்கள் ஏராளம்.
வானுயுர வரலாறு கொண்டது எனினும் கேட்பாரற்ற நிலையில் தான் நமது Hanger கள் உள்ளன. பலரது நீங்காத நினைவுகள் இன்னமும் இங்கு உலவுகின்றன தான். உயிரற்றது தான் ஆனாலும் பலரின் உணர்வுகளின் உயரம் அந்த Hanger. அதற்கு புதுப்பொலிவு கொடுத்து புது நினைவு பல அடைய முனைவோம்.






Mass🔥🔥🔥🔥
ReplyDelete"எழுபது வருட வரலாற்றை தன்னகத்தே கொண்ட கல்லூரி ஆதலால் இங்கு இருக்கும் கற்களிலும் புற்களிலும் கூட அந்த பழமை வாசம் வீச தான் செய்கிறது"
ReplyDelete👌👌
Arumai ...
ReplyDeleteSamaaa
ReplyDeleteArumayana padhivu , azhagana perumai serkum urainadai.thodarga thamizh Pani.
ReplyDelete👌👌👌👌
ReplyDeleteSuper
ReplyDeleteSuper
ReplyDelete😍😍🔥🔥🔥🔥
ReplyDelete👌👌👌
ReplyDelete🥰
ReplyDeleteVera level
ReplyDelete