என் அன்பு காதலியே, உன்னில் என்னை தொலைத்து இன்றோடு ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆயினும் நம் இருவரை பிணைத்திருக்கும் அன்புக் கயிறு இன்னும் அவிழ வில்லை; ஆழமாகி இருக்கிறது என்பதில் பெருமிதம். உன்னோடு பேசுகையில் இன்றும் அந்த முதல் பேச்சின் பதட்டம் – நெஞ்சோடு தான்- வெளியில் காட்டியது இல்லை நான். உனக்கு நினைவிருக்கும் என தெரியும். இருந்தும் என் மனம் அதை மீண்டும் மீண்டும் சொல்லிக் காட்டி, அந்த இனிய நினைவலைகளில் மிதக்க ஆசை கொள்கிறது. கல்லூரி முதல் நாள், முதல் வகுப்பு, உள்ளே நீ நுழைந்தாய், எல்லா ஆண்களும் உன்னை கழுகின் பார்வைக் கொண்டு பார்த்தனர்; நானும் பார்த்தேன். அப்பொழுதே என் நெஞ்சினில் அமர்ந்தாய்; ஆனந்தம் கொண்டேன். என் அருகிலே வந்து அமர்ந்தாய், சொல்லவா முடியும், அளவறியா பேரானந்தம். பல காதல் கதைகளில் படித்திருக்கிறேன், ஒரு இதயம் அதன் துணையை எப்படியோ கண்டுக்கொண்டு அதனை துடிப்பின் வேகத்தை அதிகரித்து உணர்த்திவிடும் என்று. அதனை நம்பாமல் இத்தனை நாள் சுற்றித்திரிந்த முட்டாள் தான் நான். அதற்காக அருகில் அமர்ந்தவுடன...
காலம் என் மூளையினில் கட்டாயமாக்கிய சிந்தனைகள், உரையாடல்களாக!! கதைகளாக!! வாழ்கைகளாக!!