இது அவனது முதல் கொலை. இதுவே அவனது இறுதி கொலையாக அமையவே அவனும் இந்நேரம் எண்ணிருப்பான். கொலை செய்ய உபயோகித்த கத்தியை எங்கே போட்டிருப்பான் என்று தெரியவில்லை, அவன் நினைப்பது சரியாக இருந்தால் அதனை விக்னேஷின் மார்பிலும் விலாவிலும் குத்தி எடுத்தவுடனே கீழே போட்டிருக்கவேண்டும். ஏதோ தவறு செய்து விட்டோமோ என்று ஓர் ஓரம் ஓர் எண்ணம். அவன் இருந்த நிலையில் ‘ஆஆஆ...!!!’ என்று பலமாக கத்த வேண்டும் போல மனம் குமுறியது. ஆம்புலன்ஸ், இருளையும் மழையையும் காற்றையும் கிழித்துக்கொண்டு வேகமாக சென்றது. ஓர் உயிர் பிரிவதற்கு ஆயத்தமாகி இறுதி சுவாசத்தை சுவைத்துக்கொண்டிருக்கும் அதே நேரம் இன்னொரு உயிர் முதல் சுவாசத்தை எதிர் பார்த்து காத்துக்கொண்டிருந்தது. அது விக்னேஷிக்கும் மாதவிக்கும் பிறக்கவிருக்கும் முதல் பிறவி. ஒன்று ஆம்புலன்சில், இன்னொன்று குத்துயிரும் குலையுயிருமாக இவனால் தள்ளப்பட்ட அதே இடத்தில். மாதவி முருகனின் கையை மிகவும் வலுவாக பிடித்துக்கொண்டிருந்தாள்; அது எப்படி விக்னேஷை கொன்ற அவனே அவர்களது மகளை (மகளாக இருக்க வேண்டும் என்பது அவர்களது பலநாள் பகற்கனவு) பெற்றெடுக்க துணைவான் என்ற நம்...
காலம் என் மூளையினில் கட்டாயமாக்கிய சிந்தனைகள், உரையாடல்களாக!! கதைகளாக!! வாழ்கைகளாக!!