அந்த மௌன இரவில், அவனால் எப்படி சாத்தியமாக்க முடிந்தது? எந்த ஒரு கதறல் ஒலியும் ஏற்படாதவாறு எப்படி கொலைச் செய்ய முடிந்தது? கொலைத்தொழிலில் கைத்தேர்ந்தவன் அல்லன் என்பதை கிலிப் பிடித்து நடுங்கும், அவன் கத்தி பிடித்த இடது கை காட்டிக் கொடுக்கிறது. ஏதோ சாஸ் டப்பாவை கீழே தட்டி விட்டாற்போல் தரையெங்கும் சிவப்பு மாயம். அவன் அதனைப் பார்க்கிறானா அல்லது ‘அட! அழகான வெள்ளைச் சட்டை கறைபிடித்ததே!’ என்ற எண்ணத்தில் காண்கிறானா என்றெல்லாம் தெரியாது. ஆனால் தலையை குனிந்தபடியே வைத்திருந்தான்; நாம் பெண்களிடம் எதிர்பார்ப்போமே, அதே மாதிரி தான். *** கொலை நடந்த அன்றைய தினத்தின் காலை. சேவலோ கோழியோ கூவி எழுப்பவில்லை; அது சுந்தரின் அலார்ம் டோன். நவநாகரிக வாழ்க்கையில் நடுநிசி ஏழு மணிக்கெல்லாம் எழுந்துக் கொள்ள வேண்டும் என்றால் அலார்ம் தேவை தானே. வழக்கமாக விடியும் முன்பே எழுந்துவிடும் சாவித்ரி விடுமுறை தினம் என்பதால் சுந்தரின் அலார்ம் ஒலியிலே கண் விழித்தாள். சுந்தரின் பக்கம் திரும்பி ‘குட் மார்னிங்’ என்றாள், அவனோ முகத்தை திருப்பிக்கொண்டு போகிறான். இன்னும் கோவம் தீரவில்லை போலத்தெரிகிறது. எப்பொழுதும் காலை காற்ற...
காலம் என் மூளையினில் கட்டாயமாக்கிய சிந்தனைகள், உரையாடல்களாக!! கதைகளாக!! வாழ்கைகளாக!!