"நான் ஏன் பீச் போற ட்ரைன் ஏறுனேன்?" என்னை நானே குழப்பிக்கொள்கிறேன் என்று மட்டும் தெரிந்தது. அக்டோபர் 12, என் வாழ்வில் ஒரு முக்கியமான நாளாக அமையக்கூடும் என்று இரவு 9 மணி வரையில் நான் ஊகித்திருக்கவில்லை. ‘நொடிகள் போதும் வாழ்வினைத் திருப்பிப் போட’ என்பதை அன்று தான் உணர்ந்தேன். குரோம்பேட்டை ரயில் நிலையத்தில், படி இருக்கும் பக்கம் இல்லாமல் மறுபக்கத்தின் இறுதிவரையில் சென்று, காலியாக இருக்கும் கல்லிருக்கையில் அமர்ந்துகொண்டேன். அங்கு தான் வழக்கமாக நானும் அவனும் அமர்ந்து காதல் பரிமாறும் இடம். எப்பொழுதும் எங்களை பல இரண்டு கண்கள் கண்டுகொண்டே இருந்தாலும், நாங்கள் அதனை பொருட்படுத்தியதில்லை. ஆனால், தனிமையில் அமர்ந்துகொண்டு கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் என்னை, வழிபோகும் எல்லாக் கண்களும் கண்டுநகைப்பதாய் எனக்குள் தோன்றியது. அவர்கள் கண்களுக்கு பைத்தியக்காரப் பெண்ணாய் நான் தெரிந்திருக்கலாம்! செங்கல்பட்டில் இருக்கும் எனது தோழியின் அறைக்கு செல்வதாய் தான் என் எண்ணம். நாம் எதிர்பார்த்த நேரத்தில் நாம் எதிர்நோக்கிக் காத்திருக்கும் வண்டி என்றுமே வருவதில்லை! என்னால் பொறுத்துக்கொண்டு அமர்ந்திருக்க ம...
காலம் என் மூளையினில் கட்டாயமாக்கிய சிந்தனைகள், உரையாடல்களாக!! கதைகளாக!! வாழ்கைகளாக!!