Skip to main content

Posts

Showing posts from July, 2020

வடக்கன்

இரவு நேரம். சிலரது கவிதைகளையும் பலரது கனவுகளையும் ஏந்திக்கொண்டு நிலவு மாற்றுதிசை நோக்கி பயணித்துக்கொண்டிருந்தது. இவ்விரண்டு பிரிவுகளையும் சேராத சிலரும் உலகில் இருக்கவே செய்கிறார்கள், அவர்கள் நிலவோடு தங்கள் உறக்கங்களையும் அனுப்பி வைத்தவர்கள். இவனும் அவர்களுள் ஒருவனே. நித்திரை கொள்ளவில்லை; விழிகள் வலி எடுக்க தொடங்கின. பின் இருக்காதா? இவன் வாழ்வில் ‘நிம்மதியான உறக்கம்தனை ’ எத்தனை மைல்களுக்கு அப்பாலோ, இங்கிருந்து பீகார் எத்தனை மைல் தூரம் இருக்கும் அத்தனை மைல்கள், உறங்க வைத்துவிட்டு வந்தவன் ஆயிற்றே. இரண்டு ஆண்டுகள் நெருங்கிவிட்டது, இவன் தமிழகத்தை நாடி வந்து. நிலத்தில் இறங்கி பயிர்த் தொழிலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்த தன்னுடைய இறந்த காலத்தை நினைத்துகொண்டான். உழைத்த களைப்பில் எவ்வளவு சுகமான உறக்கம் வரும் அப்போதெல்லாம்! கண்ணிற்குத் தெரியாத ஏதோ ஒரு அயல் நாட்டிற்கு செல்வதற்காக அந்த நிலத்தை விற்றுவிட்டான், அதன் சொந்தக்காரன். வேலை பறிபோனது. இவன் என்ன செய்ய, வேலை தேடி அலைந்தான், பசி இங்கு கொண்டுவந்து சேர்த்தது. மாதம் ஆயிரம் ரூ பாய் அனுப்புகிறான், அவன் குடும்பத்தினருக்கு. ஆம் திருமணம் ஆகியவன் த...