தற்போதைய நவ நாகரிக சமூகத்தில் பங்கு கொள்ளும் இளைஞர்களின் வாய் வார்த்தைகளில் தவிர்க்க முடியாத சொல்லாடலாக வழங்கி வருகிறது ‘ morattu single ’ என்னும் பதங்கள் . அதனை பற்றிய எனது எண்ணங்களை , இதுவரையில் என் வாழ்வில் பெற்ற அறிவையும் அனுபவத்தையும் ஆதாரமாகக் கொண்டு , உங்களோடு உரையாடுகிறேன் . இக்கட்டுரையில் முழுக்க முழுக்க ஒரு ஆணின் பார்வையே சொல்லப்பட்டிருக்கும் என்பதையும் தெளிய வைத்துக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன் . ‘ நானெல்லாம் பொண்ணுங்க கிட்ட பேசவே மாட்டேன் ’ என்றும் ‘ பொண்ணப் பாத்தா மண்ணப் பாக்குற வகை ’ என்றும் தற்புகழ்ச்சியாகக் கூறிக்கொண்டு திரிவது பேஷன் ஆகி விட்டது . உண்மையில் பெண்களிடம் சகஜமாக பேசும் சிலரும் அதனை மறைத்து , தாங்களும் ‘ morattu single’கள் தாம் என மார்தட்டிக்கொள்கிறார்கள் . ஆராய்ந்து பார்க்கையில் இது பெருமைப்படக் கூடிய ஒன்றாக தெரியவில்லை . இவ்வாறு கூறுபவர்கள் இரண்டு விதத்தவர்கள் . தாங்கள் படிக்கும் பள்ளிக் கல்லூரியில் சக - மாணவிகளிடமோ , பணியிடங்களில் சகப் பெண் பணியாளர்களிடமோ சகஜமா...
காலம் என் மூளையினில் கட்டாயமாக்கிய சிந்தனைகள், உரையாடல்களாக!! கதைகளாக!! வாழ்கைகளாக!!