தமிழ் திரைப்படமான காஞ்சனா படத்தில் கதாநாயகனுக்கு பேய் பிடித்துவிடும். அதனால் ஏற்பட்ட உடல் மொழி மாற்றத்தைக் கண்ட அவரது அண்ணன், ‘ராகவா பொண்ணு மாதிரி நடந்துகாதடா!’ என்பார். அந்த அளவிற்கு பெண்ணாக அவர் அந்த இடத்தில் என்ன செய்து விட்டார்? ‘இல்ல, புரில எனக்கு!!’ நமது சமூகம் ஆண்களால் ஆண்களுக்காக ஆண்களாகவே கட்டமைக்கப்பட்ட ஒரு ஆண் சமூகம், ‘நீங்க நம்பலனாலும் அது தான் நெசம்’. அந்த சௌகரிய இடத்தை இழக்காமல் காலாகாலத்திற்கும் பாதுகாக்கவே அவர்கள் பெண்களை பயன்படுத்தி வந்துள்ளனர்; வருகின்றனர். இங்குள்ள மதங்களும் மற்றைய சமூக அமைப்புகளான திருமணம் போன்றவைகளும் அதற்கே துணைபோகின்றன. அதே நேரத்தில் பறிக்கப்பட்ட உரிமைகளுக்காக குரல் எழுப்பிய பெண்களின் மறைக்கப்பட்ட வரலாறும் இங்கு பல உண்டு. அவர்கள் விடுத்துச் சென்ற விடுதலை உணர்வு இங்குள்ள பெண்களுக்கு இல்லாமல் இல்லை. காலம் காலமாக தாங்கள் எவ்வாறு அடக்குமுறைக்கு ஆளாக்கப் பட்டிருக்கின்றோம் என்று அவர்கள் சிந்திக்கத் தொடங்கியதாலே இன்றைய வாழ்வில் அவர்களால் சிறிதேனும் சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடிகின்றது. ஆனால், இந்த சமூகம் ‘ஆண்’மயமாகியதால் ஆண்கள் சுதந...
காலத்தின் குரல்
காலம் என் மூளையினில் கட்டாயமாக்கிய சிந்தனைகள், உரையாடல்களாக!! கதைகளாக!! வாழ்கைகளாக!!